சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

நாகர்கோவில், ஜூலை 9:  நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.   திங்கள்நகர் அருகேயுள்ள மேலகட்டிமாங்கோடு பகுதியை
Published on
Updated on
1 min read

நாகர்கோவில், ஜூலை 9:  நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  திங்கள்நகர் அருகேயுள்ள மேலகட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகள் கனி அன்பரசி (25). மாடத்தட்டுவிளையிலுள்ள தனியார் பள்ளியில் கணினி ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.

  மூக்கில் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது நிலைமை கவலைக்கிடமானதையடுத்து, அம்மருத்துவமனை ஊழியர்கள் கனி அன்பரசியை ஆம்புலன்ஸில் ஏற்றி, அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.  

  சிறிது நேரத்துக்குப்பின் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் முற்றுகை மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

  இது தொடர்பாக போலீஸôர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கனி அன்பரசியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

  இது தொடர்பாக, செல்லத்துரை அளித்த புகாரின்பேரில், வடசேரி போலீஸôர் வழக்குப் பதிந்தனர்.

இந்நிலையில், கனி அன்பரசியின் சடலம் சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

  அப்போது மருத்துவமனையை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர். தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை கனி அன்பரசியின் சடலத்தை வாங்கமாட்டோம் என்று அவர்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

   நாஞ்சில் முருகேசன் எம்எல்ஏ அங்குவந்து அவர்களுடனும், மருத்துவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் மாலை வரை சடலத்தை அவர்கள் பெற்றுச்செல்லவில்லை.

  இதையடுத்து, அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் புரூஸ், டிஎஸ்பி செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகளும், போலீஸôரும் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  

  இவ் விவகாரத்தில் புகாரின்பேரில் வழக்குப் பதிந்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டு, கனி அன்பரசியின் சடலத்தை அவரது உறவினர்கள் பெற்றுச்சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.