திருநெல்வேலி, ஜூலை 9:÷தமிழகத்தில் சமச்சீர் கல்வியை நிகழாண்டில் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத் பேசினார்.
÷பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் மதிமுக 18-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் திருநெல்வேலி மாநகர மாவட்ட, பாளையங்கோட்டை மத்தியப் பகுதி புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர மாவட்டச் செயலர் எம்.எல்.எப். பெருமாள் தலைமை வகித்தார்.
÷கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் மேலும் பேசியதாவது:
÷கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகிறது. எந்த பாடத்தைப் படிப்பது என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.
÷திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் நல்ல திட்டம் என்று சொன்னால் அது சமச்சீர் பாடத்திட்டம் மட்டுமே.
÷கருணாநிதி கொண்டுவந்த திட்டம் என்பதற்காக பள்ளி பாடத் திட்டத்தையே முடக்க நினைப்பது அரசின் தவறான முடிவாகும்.
÷மிகச்சிறந்த அறிஞர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களில் தரம் இல்லை என அரசு கூறுவது சரியல்ல. இதுகுறித்து அரசு விளக்கம் தர வேண்டும்.÷அதிமுக அரசு நியமித்துள்ள குழுவில் உள்ளவர்கள் சமச்சீர் கல்விக்கு எதிரானவர்கள். அதனால்தான் அவர்கள் முரண்பட்ட கருத்துகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கின்றனர்.÷பாடத்திட்ட பிரச்னையால் தமிழகத்தில் 80 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 மற்றும் 6-ம் வகுப்பு சமச்சீர் பாடத்தில் உள்ள சில பாடல்களைக் கூட அரசு மறைக்க நினைப்பது கேலிக்கூத்தாகும் என்றார் அவர்.
÷கூட்டத்தில் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.எம்.ஏ. நிஜாம், தேர்தல் பணி துணைச் செயலர் குட்டி, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் மு. சுப்புரத்தினம், மாநில சட்டத்துறை துணைச் செயலர் அரசு அமல்ராஜ், மாநகர மாவட்ட அவைத் தலைவர் எஸ்.என். சுப்பையா, துணைச் செயலர் ஜி. ஆறுமுக பாண்டியன் மத்திய பகுதிச் செயலர் எஸ். பாலு, வட்டச் செயலர்கள் எஸ். கிருஷ்ணன், எஸ். முத்துகிருஷ்ணன், செல்லப்பாண்டியன், மாநில விவசாய அணி துணைச் செயலர் ப. கல்லத்தியான் உள்ளிட்டோர் பேசினர்.