தக்கலை, ஜூலை 9:தக்கலை அருகே பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸôர் சனிக்கிழமை மீட்டனர்.
தக்கலை அருகே தென்கரை கோணியான்குளம் கரை அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தக்கலை டிஎஸ்பி சுந்தரராஜ், இன்ஸ்பெக்டர் மகேந்திரன், போலீஸôர் சென்றனர். தடயவியல் நிபுணர்கள் சென்று தடயங்களைப் பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
சடலத்தின் அருகே உணவுப் பொருள்கள், மது பாட்டில் உள்ளிட்டவை கிடந்தனவாம். தக்கலை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.