திருநெல்வேலி, ஜூலை 9:÷திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜூலை 23-ல் நடைபெறுகிறது.
÷இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக மாநகர காவல்துறை நேரம் ஒதுக்கி உள்ளது.÷இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல்துறை அலுவலகத்தில் சனிக்கிழமை அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநகர காவல் ஆணையர் வி. வரதராஜு தலைமை வகித்தார். துணை ஆணையர் எல். மார்ஸ்டன் லீயோ முன்னிலை வகித்தார்.÷நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் எஸ். லயோலா இக்னேஷியஸ், திருநெல்வேலி நகரம் உதவி ஆணையர் ஸ்டாலின், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு உதவி ஆணையர் ராஜ்மோகன் மற்றும் அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சிகள், அமைப்புகள் வாரியாக அஞ்சலி செலுத்த ஒதுக்கப்பட்ட நேரம்:
÷இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காலை 9.50 முதல் 10.05 வரை, மள்ளர் மீட்புக்களம் காலை 10.10 முதல் 10.25 வரை, பாஜக 10.30 முதல் 10.45 வரை, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 10.50 முதல் 11 வரை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 11.05 முதல் 11.30 வரை.
÷திரிணாமுல் காங்கிரஸ் 11.35 முதல் 11.45 வரை, தமிழ்ப்புலிகள் 11.50 முதல் நண்பகல் 12.05 வரை, மள்ளர் இலக்கியக் கழகம் 12.10 முதல் 12.20 வரை, ஆதித் தமிழர் பேரவை 12.25 முதல் 12.35 வரை, புரட்சி பாரதம் 12.40 முதல் 12.55 வரை. இந்த கட்சிகள், அமைப்புகள் ஹோட்டல் சகுந்தலாவில் இருந்து புறப்பட வேண்டும்.
÷புதிய தமிழகம் 1 முதல் பிற்பகல் 2 மணி வரை. இக்கட்சியினர் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பிருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக வந்து பின் மலர் அஞ்சலி செலுத்த வேண்டும்.
÷விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3.30 முதல் மாலை 4 மணி வரை, இந்திய குடியரசுக் கட்சி 4.15 முதல் 4.25 வரை, தமிழ்நாடு மின்வாரிய அம்பேத்கர் தொழிலாளர் யூனியன் 4.30 மணி முதல் 4.45 வரை, எஸ்.சி. எஸ்.டி. ஊழியர்களின் கூட்டமைப்பு 5.15 முதல் 5.30 வரை, மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி 5.35 முதல் 5.45 வரை, எஸ்.சிஸ்.டி. ஊழியர் சங்கம் 5.50 முதல் 6 மணி வரை. இவ்வமைப்பினர் ஹோட்டல் சகுந்தலா முன்பு கூடி ஊர்வலமாக வர வேண்டும்.
÷தலைவர்கள் மற்றும் உயிர் நீத்தவர்களின் உறவினர்கள் மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
÷கோஷங்கள் எழுப்பக்கூடாது, ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அனுமதி, அஞ்சலியின்போது கொடி, பேனர்கள் எடுத்துவரக் கூடாது. அரசுக்கு எதிராக கோஷமிடக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது.