திருநெல்வேலி, ஜூலை 9:÷திருநெல்வேலி நகர வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவர் கே. முருகேசன் தலைமை வகித்தார். பொருளாளர் என்.மீரான் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் இளங்கோ பி. மணி, எஸ். பெத்துக்கனி, துணைப் பொதுச் செயலர் என். முருகன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆ. குருநாதன், ஆ. செல்லச்சாமி, எஸ். சண்முகசுந்தரம், ஜி. தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கப் பொதுச் செயலர் க. ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு வணிகர் நலவாரியத்தில் உள்ளாட்சி உரிமம் பெற்ற சிறுவணிகர்களும் உறுப்பினர்களாகச் சேரலாம் என உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு பாராட்டுத் தெரிவிப்பது.
நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் இம் மாதம் 12-ஆம் தேதி நடைபெறும் தேர் திருவிழாவில், திருத்தேர்களை ஒரே நாளில் நிலையம் வந்து சேர்த்திட அனைத்து வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்களைக் கேட்டுக் கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.