குலசேகரம், ஜூலை 9: பேச்சிப்பாறை அரசுப் பழங்குடியினர் பள்ளியில் வன உயிரின வார விழா வெள்ளிக்கிழமை கொண்டாப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் தேவராஜ் தலைமை வகித்தார். தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஜாய்ஸ் சுந்தரபாய் வரவேற்றார்.
ஆசிரியர்கள் எம். சுந்தரம், நாகப்பன் ஆகியோர் வனங்கள் மற்றும் வன உயிரினங்கள் குறித்துப் பேசினர்.
வன உயிரின வார விழா பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி திவ்யா, இரண்டாமிடம் பிடித்த செüமியா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் தங்க லிண்டா நன்றி கூறினார்.
விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.