தக்கலை, ஜூலை 9: விலைவாசி உயர்வைக் கண்டித்தும், ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவிதாங்கோடு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டனர் (படம்).
இப்பிரசார பயணத்துக்கு, தக்கலை வட்டாரக் குழு முன்னாள் உறுப்பினர் சேது, திருவிதாங்கோடு பேரூராட்சி மன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆலங்கோட்டில் தொடங்கிய பாதயாத்திரை மேட்டுகடையில் முடிவுற்றது. பிரசாரப் பயணத்தின்போது மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமோகன், தக்கலை வட்டாரச் செயலர் சைமன்சைலஸ், வட்டாரக் குழு உறுப்பினர்கள் அரங்கசாமி, ஜனநாயக மாதர் சங்க தக்கலை வட்டாரச் செயலர் சுஜா ஜாஸ்மின் ஆகியோர் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் ராஜன் முடித்துவைத்துப் பேசினார்.
டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
நீதித்துறையில் ஊழலைத் தடுக்க தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்க வேண்டும். கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.