திருநெல்வேலி, ஜூலை 14: திருநெல்வேலி அருகே வியாழக்கிழமை ஊராட்சி மன்ற ஊழியரை அரிவாளால் வெட்டிய அடையாளம் தெரியாத நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
நெல்லை பாணான்குளத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (41). இவர், நான்குனேரி அருகேயுள்ள இறைப்புவாரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பாணான்குளம் பிரதான சாலை அருகே வியாழக்கிழமை இசக்கிமுத்து நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இசக்கிமுத்துவை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினராம்.