திருநெல்வேலி, ஜூலை 14: மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப் பணித் துறையில் ஓராண்டு "எலக்ட்ரீஷியன்' காலை நேர பயிற்சி வகுப்பு மதுரையில் ஜூலை 25ஆம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக இப் பல்கலைக்கழகத்தின் வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப்
பணித்துறை இயக்குநர் ஆர். முத்துலட்சுமி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஓராண்டு காலைநேர எலக்ட்ரீஷியன் பயிற்சி வகுப்பு இம் மாதம் 25ஆம் தேதி தொடங்குகிறது. இப் பயிற்சிக்கான விண்ணப்பம் இப்போது அலுவலகத்தில் வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேறிய, தவறிய மற்றும் அதற்கு மேலும் பயின்ற மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
வீட்டு உபயோகப் பொருள்களான தேய்ப்பு பெட்டி, மின்விசிறி, மிக்ஸி, வெட்கிரைண்டர், காப்பி மேக்கர், ஹீட்டர் உள்ளிட்ட இயந்திரங்களின் அமைப்பு, செயல்படும்விதம், பராமரிக்கும் முறைகள், பழுதுகளைக் கண்டறிதல், பழுது நீக்குதல், ரீவைண்டிங் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
இப் பயிற்சி நடைபெறும் இடமான, இயக்குநர், மதுரை காமராஜர் பல்கலைக் கழக, வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும்விரிவுப் பணித்துறை, அழகர்கோயில் சாலை, மதுரை 2 என்ற முகவரியில் சேர்க்கை விண்ணப்பங்களைப் பெறலாம்.