நாகர்கோவில், ஜூலை 14: மும்பை குண்டுவெடிப்பு எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் புதன்கிழமை இரவு வாகன சோதனை நடத்தப்பட்டது.
மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அருண் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸôர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். சோதனைச் சாவடிகளில் போலீஸôர் உஷார்படுத்தப்பட்டனர்.
நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீஸôர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த 120 பேரின் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
நாகர்கோவில், கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டன.