கோவில்பட்டி, ஜூலை 14: கோவில்பட்டியில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஏ.டி.எம். மையத் திறப்பு விழா நடைபெற்றது.
மதுரை மண்டலத்தில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் 15-து ஏ.டி.எம். மையத் திறப்பு விழா கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. விழாவுக்கு சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா மதுரை மண்டல உதவிப் பொதுமேலாளர் பெரியதம்பி தலைமை வகித்தார்.
கோவில்பட்டி லாயல் நூற்பாலை உதவித் தலைவர் தியாகராஜன் ஏ.டி.எம். மையத்தைத் திறந்து வைத்தார். விழாவில், கோவில்பட்டி வங்கி கிளையின் முதன்மை மேலாளர் ஏசுதாஸ், லாயல் நூற்பாலை பொதுமேலாளர் ராமநாதன், உதவிப் பொதுமேலாளர் சரவணன், வங்கி அதிகாரிகள்மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.