நாகர்கோவில், ஜூலை 14:÷கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ரூ.50 லட்சத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார்.
÷மீன்பிடித் துறைமுகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தபின் அவர் கூறியதாவது:
÷கடலில் பிடித்துவரும் மீன்களைப் பாதுகாக்க ரூ.13.17 லட்சம் மதிப்பில் குளிர்பதன அறை, ரூ.9.16 லட்சத்தில் புதிய மீன் ஏலம்விடும் அறை, ரூ.15.99 லட்சத்தில் மின் இணைப்பு வசதி, ஹைமாஸ் விளக்கு அமைத்தல், ரூ.1.04 லட்சத்தில் தரைநிலை நீர்தேக்கத் தொட்டி, ரூ.2.44 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வெளியேற்றும் வசதி, ரூ.7.82 லட்சத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் என மொத்தம் ரூ.50 லட்சத்தில் சுனாமி திட்ட செயலாக்கத்தின் மூலம் பணிகள் செய்யப்படவுள்ளன. இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
÷இத்துறைமுகத்தை சுகாதாரமாகப் பராமரிக்கவும், மீன்பிடித் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.
÷சுனாமி திட்ட செயலாக்க செயற்பொறியாளர் பிரேம்சந்தர், உதவிப் பொறியாளர் ராதாகிருஷ்ணன், இளநிலைப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக உதவி செயற்பொறியாளர் ஞானபிரகாசம், மீன்வளத்துறை உதவி இயக்குநர் முசாதிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.