கோவில்பட்டி, ஜூலை 14: தூத்துக்குடி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலர் அ.வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
÷இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
÷தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன.
÷கடந்த ஆட்சியில் 30-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
÷இதனால் உள்ளூரிலேயே கல்வி பயில மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. கிராமப்புறங்களிலுள்ள மாணவ, மாணவிகளின் கல்வித் தரமும் மேம்படுகிறது. ÷இடைநிற்றல் , குழந்தைத் தொழிலாளர் முறை இதனால் முற்றிலும் ஒழிக்கப்படுகிறது. ÷இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட பூதலப்புரம், கோடாங்கிப்பட்டி, காடல்குடி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.
÷எனவே போதுமான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும் விளையாட்டு மைதானம், குடிநீர், கழிப்பறை , விடுதி வசதிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.