மார்த்தாண்டம், ஜூலை 14:
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
÷மார்த்தாண்டத்தை அடுத்த பாகோடு பொற்றைவிளையைச் சேர்ந்தவர் சாரதா (65). இவர் தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை பாப்ரிகோணம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இருவர் அவர் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
÷இதுகுறித்து சாரதா அளித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.