தக்கலை, ஜூலை 14:÷காட்டாத்துறை அருகே பைக்குகள் மோதியதில் ஒருவர் இறந்தார். நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.
÷கன்னியாகுமரி மாவட்டம், மருதூர்குறிச்சி வையாளிவிளையைச் சேர்ந்தவர் தாம்சன்.
÷இவரது மகன் அஜிதாப் ( 23 ). இவர் தனது நண்பர்களான ஊர்சாத்திவிளையைச் சேர்ந்த ஜான்( 28) மற்றும் ரமேஷ் ( 27) ஆகியோரை தன்னுடைய பைக்கில் ஏற்றிக் கொண்டு புதன்கிழமை இரவு காட்டாத்துறைக்கு வந்து கொண்டிருந்தார்.
÷இந்நிலையில் மருதூர்குறிச்சியைச் சேர்ந்த ஆல்வின் லாரன்ஸ் மகன் ஸ்டீபன், தன்னுடைய உறவினர் பெனோவுடன் பைக்கில் காட்டாத்துறை நோக்கி வந்து கொண்டிருந்தார். புலவன்விளை அருகே அஜிதாப்பின் பைக்கும், ஸ்டீபன் பைக்கும் மோதிக் கொண்டனவாம். அஜிதாப் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
÷பலத்த காயமடைந்த ஜான் மற்றும் ரமேஷ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஸ்டீபன் மற்றும் பெனோ தக்கலை தலைமை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
÷இதுகுறித்து தக்கலை காவல் நிலைய உதவி - ஆய்வாளர் விஜயகுமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.