நாகர்கோவில், ஜூலை 14:÷மணவாளக்குறிச்சி அருகே ரேஷன் கடையை திறக்க தாமதமாக வந்த ஊழியரை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்தனர்.
÷மணவாளக்குறிச்சி தருவை பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை உள்ளது. வாரத்தில் 4 நாள்கள் இந்த கடையிலிருந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
÷ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் கடை திறக்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
÷இந்நிலையில் வியாழக்கிழமை மண்ணெண்ணெய் விநியோகம் செய்யும் நாள் என்பதால் காலையிலேயே ஏராளமானோர் அந்த ரேஷன் கடைக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
÷ஆனால் ரேஷன் கடை ஊழியர் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து கடையைத் திறக்கவில்லையாம். 2 மணிநேரம் தாமதமாக வந்த அவரை, பொதுமக்கள் மணவாளக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவர் குட்டிராஜன் தலைமையில் சிறைபிடித்தனர்.
÷இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் ஆறுமுகநயினார், சிறப்பு வருவாய் ஆய்வாளர் விஜிமாறன் உள்ளிட்டோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
÷குறிப்பிட்ட நேரத்தில் கடையைத் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி தெரிவித்ததை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.