திருநெல்வேலி, ஜூலை 14: மும்பை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் ஆத்மா சாந்தியடைய அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் வியாழக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
இந்து முன்னணி மாநகர மாவட்டத் தலைவர் டி. பாலாஜி கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலர்
கா. குற்றாலநாதன், மாவட்ட துணைத் தலைவர் பி. வெட்டும்பெருமாள், செயலர் எஸ். உடையார், நிர்வாகிகள் வேல்முருகன், எஸ். சுடலைமணி, டி. கௌரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.