திருநெல்வேலி, ஜூலை 14: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற கிளைகள் மூலம் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள வாராக் கடன்களுக்கான வங்கிக் கடன் சமரசத் தீர்வு முகாம் திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி அய்யாத்துரை தலைமை வகித்தார். வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் சி. சீனிவாசன் முன்னிலையில் கடன்தாரர்களை அழைத்து பேசிய நீதிபதி கடன் தொடர்பான சமரசத் தீர்வுகளை வழங்கினார்.
முகாமின்போது, 33 கடன்தாரர்கள் ரூ. 9.24 லட்சத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வங்கியில் திரும்பச் செலுத்திவிடுவதாக உறுதியளித்தனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர்கள் எஸ். சங்கரசுப்பிரமணியன், எம். ராஜூ, முதுநிலை மேலாளர்கள் கே. தேவதாஸ் சாம்ராஜ், ரவிச்சந்திரன், எஸ். சண்முகவேலாயுதம், மோசஸ், எஸ். செüந்திரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.