திருநெல்வேலி, ஜூலை 14: நலிந்த நிலையில் வாழும் வயோதிக கலைஞர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
நலிந்த நிலையில் வாழும் வயோதிக கலைஞர்களுக்கு அரசு மாதம் ரூ. 1000 நிதியுதவி வழங்க உள்ளது.
இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், கிராமியக் கலைகள் மற்றும் ஓவியம், சிற்பம் ஆகிய கலைத்துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி இப்போது 58 வயது நிறைவடைந்த அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடன் வறுமையில் நலிந்து வாழும் வயோதிகக் கலைஞர்கள் நிதியுதவிப் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை மண்டலக் கலை பண்பாட்டு மையத்தில் நேரிலோ அல்லது ரூ. 10-க்கான அஞ்சல்விலை ஒட்டப்பட்ட சுயமுகவரி கொண்ட உறையை அனுப்பித் தபாலிலோ பெறலாம்.
ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்/ஹல்ல்ச்ர்ழ்ம்ள்/ஹழ்ற்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்/ண்ஹ்ஹப்-ண்ள்ஹண்-ஹல்ல்ச்ர்ழ்ம்.ல்க்ச் என்ற இணையதள முகவரியிலிருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உதவி இயக்குநர், திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையக் கட்டடம், 820, டிரக்டர் தெரு, அரசு அலுவலர் "அ' குடியிருப்பு திருநெல்வேலி-7 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தொலைபேசி எண் 0462-2553890.
இத் திட்டத்தில் 2009, 2010 ஆம் ஆண்டில் விண்ணப்பம் செய்தவர்கள் இப்போது விண்ணப்பம் அனுப்பவேண்டியதில்லை.