கருங்கல்,ஜூலை 14:÷புதுக்கடை அருகே உள்ள மணியாரம்குன்று பகுதியில் தங்களுடைய கணவர்களின் வீட்டு முன் வரதட்சிணையை திருப்பிக் கேட்டு 2 பெண்கள் புதன்கிழமை மாலை முதல் போராட்டம் நடத்தினர்.
÷மணியாரம்குன்று பகுதியைச் சேர்ந்த ராஜையன் மகன் தாஸ் (30). டெய்லர்.÷இவருக்கும் முட்டகுளம் பகுதியைச் சேர்ந்த இந்துவுக்கும் (25) 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.÷திருமணமான 6 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து இருந்தனராம்.÷ராஜையனின் 2- வது மகன் சேகர் (27). இவர் நாகர்கோயிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.÷இவருக்கும் கருங்கல் பகுதியைச் சேர்ந்த சுஜிக்கும் (24) மே மாதம் திருமணம் நடைபெற்றது.÷இவர்களும் கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான 19- வது நாளிலேயே ஹபிரிந்தனராம். ÷இதையடுத்து இந்துவும்,சுஜியும் தனித்தனியாக புதுக்கடை மற்றும் குளச்சல் மகளிர் காவல் நிலையங்களில் வரதட்சிணையை திருப்பிக் கேட்டு புகார் அளித்துள்ளனர்.
÷ஆனால் இதுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லையாம். எனவே பாதிக்கப்பட்ட இரு பெண்களும் புதன்கிழமை மாலை கணவர்களின் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த தாஸ்,சேகர் இருவரும் தலைமறைவாகி விட்டனராம்.
÷போராட்டம் குறித்து தகவலறிந்த பைங்குளம் ஊராட்சித் தலைவர் சந்திரகுமார், முன்சிறை ஊராட்சி ஒன்றியத் தலைவர் பிரேம்குமார்,புதுக்கடை காவல் ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் 2 பெண்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுஜிக்கு உடன்பாடு ஏற்பட்டது. இந்துவுக்கு உடன்பாடு ஏற்படவில்லையாம்.