கோவில்பட்டி, ஜூலை 30: கார்கில் போரில் உயிர்நீத்த அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவில்பட்டியில் நடைபெற்றது.
இலுப்பையூரணி நேதாஜி சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி டி.எஸ்.பி. சிலம்பரசன் தலைமை வகித்தார்.
இலுப்பையூரணி ஊர் கமிட்டி செயலர் கொம்பையா, மனித உரிமை கழக நெல்லை மண்டல இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் வெள்ளைத்துரை, சங்கரன், குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு உயிர்நீத்த அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய வரைப்படம் போன்று 524 தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ராணுவவீரர்கள் அசோக்குமார், மந்திரசூடாமணி, முருகன், நேதாஜி விவேகானந்தா சேவா சங்க மாணவரணி, மகளிரணி, இளைஞரணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேவை தொண்டர் துரைப்பாண்டி நன்றி கூறினார்.