நாகர்கோவில், ஜூலை 30: கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் அதிமுக அரசைக் கண்டித்து ஆக. 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட திமுக செயலர் என். சுரேஷ்ராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று திமுக தலைமைக் கழக முடிவுக்கு இணங்க, மாவட்ட திமுக சார்பில் திங்கள்கிழமை (ஆக. 1) காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
எனது தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில், கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் ஜி.எம். ஷா,
முன்னாள் எம்.பி. சங்கரலிங்கம், மாநில மீனவரணிச் செயலர் இரா. பெர்னார்டு, மாவட்ட திமுக நிர்வாகிகள் வி. ஜோசப்ராஜ், ஹெலன்டேவிட்சன் எம்.பி., புஷ்பலீலா ஆல்பன் எம்.எல்.ஏ., ஆத்தியடி அருள்ராஜ், பொன். சின்னத்துரை, நகரச் செயலர் ஆர். மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இப்போராட்டத்தில் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பேரூர் கழகச் செயலர்கள், கிளைக் கழகச் செயலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார் அவர்.