கருங்கல்,ஜூலை 30: கருங்கல் அருகே இளைஞருக்கு கொலைமிரட்டல் விடுத்த மற்றொரு இளைஞரை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பாலப்பள்ளம் சென்னன்விளை பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் சுரேஷ் (36). இவருக்கும் வெள்ளியாவிளை பகுதியைச் சேர்ந்த சிங்காரராஜன் மகன் டேவிட் (38) என்பவருக்கும் பல ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை சுரேஷ் கருங்கலிருந்து பாலப்பள்ளத்துக்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தாராம். அப்போது கருங்கல் ஆட்டோ நிலையம் அருகில் சென்ற அவரை டேவிட் வழிமறித்து தடுத்து நிறுத்தி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பைக்கை சேதப்படுத்தினாராம்.
இதுகுறித்து கருங்கல் போலீஸôர் வழக்குப் பதிந்து டேவிட்டை கைது செய்தனர்.