சாத்தான்குளம், ஜூலை 30: சாத்தான்குளம் புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா 5 நாள்கள் நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தாளாளர் எட்வர்ட் ஜே அடிகள் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை அருள்சகோதரி மெர்ஸி ஆண்டனி வரவேற்றார். ஆசிரியை ரெஜினா, பேய்க்குளம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கீதராஜ், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ராமகிருஷ்ணன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அண்ணாமலை, உதவிப் பங்குத்தந்தை வசந்தன் ஆகியோர் பேசினர்.