மார்த்தாண்டம், ஜூலை 30: மார்த்தாண்டத்தை அடுத்த நல்லூர் பேரூராட்சிப் பகுதிகளில் தேமுதிக கொடியேற்று விழா நடைபெற்றது.
விழாவுக்கு, கட்சியின் நல்லூர் பேரூர் செயலர் அர்ச்சுணன் தலைமை வகித்தார்.
பேரூர் நிர்வாகிகள் ரசல், கமலதாஸ், ராஜேஷ், ராபின்சன், ரகுதாஸ், லதாகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நல்லூர் பேரூர் அவைத் தலைவர் சதீஷ் வரவேற்றார்.
கட்சியின் கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர் எஸ். ரவி கொடியேற்றி வைத்துப் பேசினார். மாவட்ட அவைத் தலைவர் மரிய சிசுகுமார், மாவட்டப் பொருளாளர் சுகுமாரன், முன்னாள் மாவட்டச் செயலர் ஜெகநாதன், மாவட்ட துணைச் செயலர்கள் தினேஷ், ஸ்ரீகுமார், வர்க்கீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சாத்திரங்குழி, முளங்குழி மற்றும் குழித்துறை ரயில் நிலையம் அருகிலும் கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்டன. நல்லூர் பேரூர் கேப்டன் மன்றச் செயலர் ரெஜில்குமார் நன்றி கூறினார்.