கோவில்பட்டி, ஜூலை 30: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவில்பட்டி கிளை பணிமனை முன்பாக ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் சனிக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற்கூட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் கிளைத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஜெயபால், கே. பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருதுநகர் மண்டலத்துக்கு விருப்புரிமை கொடுத்த அனைவரையும் உடனடியாக அனுப்பி வைக்கவேண்டும். சேமநல, தினக்கூலி தொழிலாளர்களை முன்தேதியிட்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பராமரிப்புப் பிரிவைச் சீரழிக்கும் கிளை மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவுப் பணி, கேன்டீன் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். தொழில்நுட்ப அலுவலகப் பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் அழகுமுத்துப்பாண்டியன், வட்டாரச் செயலர் பரமராஜ், மத்திய சங்கச் செயலர் ஆறுமுகம், விருதுநகர் மத்திய சங்க இணைச் செயலர் எஸ். பாண்டியன், கிளைப் பொருளாளர் வைத்திலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.