நாகர்கோவில், ஜூலை 30: கன்னியாகுமரி மாவட்டம், சடயமங்கலத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கிளைத் தலைவர் கோமதி தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெனட்மேரி முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
விவசாய தொழிலாளர் சமூக பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக சங்கச் செயலர் சுந்தரேசன் விளக்கினார். விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்டச் செயலர் மலைவிளை பாசி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு அஞ்சல் நிலையங்களிலும் அஞ்சல் அட்டை, கவர்கள் பற்றாக்குறை உள்ளதாக தெரியவந்துள்ளது. இப்போது பதிவு அஞ்சல் முறையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அஞ்சல் துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு குறைபாடுகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.