தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றத்தில் வாதிரியார் இனத்தைச் சேர்க்க எதிர்ப்பு

தூத்துக்குடி, பிப்.  14:    தேவேந்திரகுல வேளாளர் என்ற புதிய பெயர் மாற்றத்தில் வாதிரியார் இனத்தைச் சேர்க்கக் கூடாது என வலியுறுத்தி அச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி, பிப்.  14:    தேவேந்திரகுல வேளாளர் என்ற புதிய பெயர் மாற்றத்தில் வாதிரியார் இனத்தைச் சேர்க்கக் கூடாது என வலியுறுத்தி அச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 தூத்துக்குடி முத்தையாபுரம் வாதிரியார் தெரு, 3-வது மைல் வாதிரியார் தெரு, அண்ணாநகர், காயல்பட்டினம், கோயில்பிள்ளை விளை, சில்வர்புரம்,சேரகுளம் உள்ளிட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த வாதிரியார் இனமக்கள் சுமார் 1,000 பேர் திங்கள்கிழமை வேன்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

 வழக்கறிஞர் கோயில்பிச்சை, ஊர்த் தலைவர்கள் பி. பரமசிவம், வெ. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், வாதிரியார் இனத்தை தேவேந்திரகுல வேளாளர் பெயரில் சேர்க்க கூடாது என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

 தொடர்ந்து, அவர்களது பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் சி.நா. மகேஸ்வரனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனு விவரம்:

 குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகளையும், ஒன்றிணைத்து, தேவேந்திரகுல வேளாளர் என பெயர்மாற்றம் செய்து ஆணையிடவும், இது தொடர்பாக ஆட்சேபணை இருந்தால் அரசு நியமித்துள்ள ஒருநபர் குழுவிடம் முறையிடலாம் எனவும் 7.1.2011-ல் அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தேவேந்திரகுல வேளாளர் என்ற புதிய பெயர்மாற்றத்தில் வாதிரியார் இனத்தைச் சேர்க்க வேண்டாம் என எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து கொள்கிறோம்.

 தற்போது வாதிரியார் இனம் எஸ்.சி. பட்டியலில் எண் 72-ல் இருப்பது போல தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

 புதிய பெயர்மாற்றத்தில் எங்கள் இனத்தைச் சேர்த்தால், வாதிரியார் இன மக்களின் திருமண உறவுகள் பாதிக்கப்பட்டு, கலாசார சீரழிவு ஏற்படும்.

 இதனால், வாதிரியார் இனமே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு எங்கள் இன மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு  தற்போதுள்ள நிலை தொடர ஆணை வெளியிட வேண்டும் என்றனர் அவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com