அம்பாசமுத்திரம், பிப். 10:÷திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலர் ஆர். முருகையாபாண்டியன் தலைமையில் அம்பாசமுத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
÷முதல்வர் ஜெயலலிதாவின் 64- வது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
÷இதில், இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., பி.ஜி. ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நகர்மன்றத் தலைவர்கள் வே. செல்வி, இ. மனோன்மணி, ஊராட்சி ஒன்றியத் தலைவி ந. முருகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வி. கருத்தபாண்டி, செவல் எஸ். முத்துசாமி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
÷கூட்டத்தில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவரும், முன்னாள் பேரவைத் தலைவருமான பி.எச். பாண்டியன் பேசியதாவது:
÷எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கத்தையும், ஆட்சியையும் அவர் வழியில் முதல்வர் ஜெயலலிதா வழி நடத்துகிறார்.
÷சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளையும் டெபாசிட் இழக்கச் செய்யும் வகையில் அதிமுகவினர் உழைக்க வேண்டும்.
÷சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தயவால் வெற்றி பெற்றவர்கள் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அடையாளம் தெரியாமல் போவார்கள் என்றார் அவர். பின்னர் அமைச்சர் பி. செந்தூர்பாண்டியன் பேசினார்.
÷மேலும்,அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் தமிழ்மகன்உசேன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பி. நாராயணபெருமாள், மாவட்ட மாணவரணிச் செயலர் ஏ.கே. சீனிவாசன், மாவட்ட மகளிரணிச் செயலர் குமுதாபெருமாள்,சிறுபான்மை அணி துணைச் செயலர் ஐ.எஸ். இன்பதுரை, கட்சியின் சார்பு அணி நிர்வாகிகள் ராஜமணிகண்டன், கைலாசராஜன், ஜெகதீஷ், முருகேசன், மு. ஆறுமுகநயினார், மீனாட்சி, க. லட்சுமணன்,ஒன்றியச் செயலர்கள் எஸ். மாணிக்கராஜ், கே. ராமசுப்பிரமணியன், கி. ராம்குமார், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் அ. கீதா, எப்சி, ரா. கிரிஜா, வி.எஸ்.ஆர். ஜகதீஷ், பேரூராட்சித் தலைவர்கள் கா. அல்லாபிச்சை, பொ. இசக்கிபாண்டியன், வி. சிவன்பாபு, என். கணேசன், நகரச் செயலர்கள் என். ஆறுமுகம், எஸ். சங்கரநாராயணன், கே.பி.எஸ். பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் வி.வி. ராகவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
÷தொகுதிச் செயலர் கூனியூர் ப. மாடசாமி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., எம். சக்திவேல்முருகன் நன்றி கூறினார்.