இடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றி

பலசூர் (ஒடிசா), பிப்.10: ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழிக்கும்  இடைமறிப்பு ஏவுகணை (இன்டர்செப்டர் மிûஸல்) சோதனையை இந்தியா  வெற்றிகரமாக நடத்தியது. வெள்ளிக்கிழமை ஒடிசா கடலோரம் அமைந்துள்ள ஏவுகணை தளத்திலிர
Published on
Updated on
2 min read

பலசூர் (ஒடிசா), பிப்.10: ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழிக்கும்  இடைமறிப்பு ஏவுகணை (இன்டர்செப்டர் மிûஸல்) சோதனையை இந்தியா  வெற்றிகரமாக நடத்தியது.

வெள்ளிக்கிழமை ஒடிசா கடலோரம் அமைந்துள்ள ஏவுகணை தளத்திலிருந்து  மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை முழுமையான வெற்றியடைந்ததாக ஐடிஆர் மைய இயக்குநர் எஸ்.பி. டாஷ் தெரிவித்தார்.

இதன்மூலம் எதிரி நாடுகளிலிருந்து ஏவப்படும் ஏவுகணையை நடுவானில் இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகளைக் கொண்ட வெகுசில முன்னேறிய நாடுகள் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

இந்த சோதனை இரு வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக  தரையிலிருந்து சென்று இலக்கை அழிக்கும் பிருத்வி ஏவுகணை காலை 10.13 மணிக்கு சந்திப்பூரில் உள்ள நடமாடும் ஏவு வாகனத்திலிருந்து ஏவப்பட்டது. இந்தப் பகுதியானது கடல்பகுதியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து 3 நிமிஷங்களுக்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட இடைமறிப்பு  ஏவுகணை வீலர் தீவிலிருந்து ஏவப்பட்டது. சந்திப்பூரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வீலர் தீவு.

விண்ணில் புறப்பட்ட சில விநாடிகளில் இதிலுள்ள கருவிகள், ரேடார் சாதனங்கள்  துரிதமாக செயல்பட்டு பிருத்வி ஏவுகணை வரும் பாதையைக் கண்டுபிடித்து  நடுவானிலேயே அழித்தது. கடல் மட்டத்திலிருந்து 15 கி.மீ. உயரத்தில் பிருத்வி  ஏவுகணையை இடைமறிப்பு ஏவுகணை தாக்கி அழித்தது.

தாக்கி அழிக்கும் நடைமுறை மிகவும் துல்லியமாக நடைபெற்றதாக தாஷ் மேலும்  கூறினார். இது செயல்படும் விதம், துல்லியத்தன்மையை பல்வேறு நிலைகளில் கண்காணிக்கப்பட்டது. இடைமறிப்பு ஏவுகணை சோதனை மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றதாக மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்து மைய (டிஆர்டிஓ) அதிகாரி தெரிவித்தார்.

இடைமறிப்பு ஏவுகணை 7.5 மீட்ட உயரம் கொண்டதாகும். திட எரிபொருளில் செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. நேவிகேஷன் எனப்படும் வரைபட உதவி மற்றும் உயர் நுட்ப கம்ப்யூட்டர், உடனடியாக செயல்படக் கூடிய ஆக்டிவேட்டர் ஆகியன இதில் உள்ளன.

இந்த இடைமறிப்பு ஏவுகணைக்கென நடமாடும் ஏவுதளம் உள்ளது. மற்றும் இடைமறிப்பதற்குத் தேவைப்படும் அனைத்து தகவல் தொகுப்புகளும் அதில் உள்ளன. தன்னிச்சையாக பாதைகளைக் கண்டறியும் திறன் மற்றும் அதிநவீன ரேடார் சாதனங்கள் இதன் கூடுதல் பலமாகும்.

இதற்கு முன்பு நவம்பர் 27, 2006-ம் ஆண்டிலும், டிசம்பர் 6, 2007-ம் ஆண்டிலும். மார்ச் 6, 2009-ம் ஆண்டிலும் இதுபோன்ற சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நான்காவதுமுறையாக சோதனை 2010-ம்ஆண்டில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி ஏவுகணை சோதனை நடத்தும் முன்பாக அதிலுள்ள தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு பயண திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த நாளான மார்ச் 15-ல் பிருத்வி ஏவுகணை திட்டமிட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதால், இடைமறிப்பு வாகனம் அனுப்பும் முயற்சி நிறுத்தப்பட்டது. இதே பிரிவில் ஐந்தாவது முறையாக இடைமறிப்பு ஏவுகணை சோதனை 2010, ஜூலை 26-ல் மேற்கொள்ளப்பட்டது. இப்போது இதில் சில தொழில்நுட்ப மேம்பாடு செய்யப்பட்டு மார்ச் 6, 2011-ல் மேற்கொள்ளப்பட்டதில் அது வெற்றிகரமாக அமைந்தது என்று டாஷ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.