சங்கரன்கோவில், பிப். 10:÷சங்கரன்கோவில் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 36 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
÷சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டைக்குச் செல்லும் அரசு பஸ் வெள்ளிக்கிழமை ஈச்சந்தாவுக்குச் சென்று கொண்டிருந்தது.
÷பஸ்ஸில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனராம். ஈச்சந்தாவுக்கு அரை கிலோ மீட்டர் முன்னதாக உள்ள பாலத்தில் பஸ் சென்றபோது, எதிரே வந்த சுமை ஆட்டோவுக்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் பஸ்ûஸ திருப்பினாராம்.
÷அப்போது திடீரென பஸ் நிலைதடுமாறி சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், நான்குனேரியைச் சேர்ந்த பேராசிரியர் அஜீத் (37), பருவக்குடியைச் சேர்ந்த பஸ் நடத்துநர் க.மாரிச்சாமி (40), தச்சநல்லூரைச் சேர்ந்த ஆசிரியர் த.கலையரசி (38), சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஆசிரியர் அ.சுப்புலெட்சுமி(37) உள்பட 36 பேர் பலத்த காயம் அடைந்தனர்.÷இதில் 12 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
÷காயமடைந்தவர்களை ச.தங்கவேலு எம்.பி.,மேலநீலிதநல்லூர் ஒன்றியத் தலைவர் முருகையா,முன்னாள் எம்.எல்.ஏ., கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
வீரவநல்லூர் அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு
அம்பாசமுத்திரம், பிப். 10:÷திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே வெள்ளிக்கிழமை கால்வாயில் ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது.
÷வீரவநல்லூர் அருகே காருக்குறிச்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குப் பின்புறம் கன்னடியன் கால்வாய் கரையில் மலைப்பாம்பு செம்மறி ஆட்டுக்குட்டியை விழுங்கிக் கொண்டிருந்தது. ÷இதைப் பார்த்த பொதுமக்கள் அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் மயில்ராஜு தலைமையில் தீயணைப்புப் படையினர் சென்று மலைப்பாம்பை பிடித்தனர்.
÷இதில் மலைப்பாம்பு கடித்ததால் ஆட்டுக்குட்டி இறந்தது. சுமார் 12 அடி நீளம் 50 கிலோ எடை கொண்ட அந்த மலைப்பாம்பு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ÷பின்னர் மணிமுத்தாறு காட்டில் மலைப்பாம்பை வனத்துறையினர் கொண்டு சென்று விட்டனர்.