சுரண்டை கோயிலில் 2508 திருவிளக்கு பூஜை

சுரண்டை, பிப்.10:÷சுரண்டை ஸ்ரீஅழகுபார்வதி அம்மன் கோயிலில் 2508 திருவிளக்கு பூஜை வழிபாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ÷விழாவையொட்டி காலையில் கணபதி ஹோமமும், குற்றால தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி
Published on
Updated on
1 min read

சுரண்டை, பிப்.10:÷சுரண்டை ஸ்ரீஅழகுபார்வதி அம்மன் கோயிலில் 2508 திருவிளக்கு பூஜை வழிபாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

÷விழாவையொட்டி காலையில் கணபதி ஹோமமும், குற்றால தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு 51 வகை அபிஷேகமும் நடைபெற்றன.

÷மாலையில் சுரண்டை ஸ்ரீஜயேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. ÷தொடர்ந்து இரவில் நடைபெற்ற 2508 திருவிளக்கு பூஜை வழிபாட்டு விழா நிகழ்ச்சிக்கு குற்றாலம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி கிருபானந்தா தலைமை வகித்தார்.

÷வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் ஆர்.சுமங்கலி, சுரண்டை காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.சங்கர்தேவ், சுரண்டை பேரூராட்சித் தலைவர் வ.ஜெயராணி, துணைத் தலைவர் எஸ்.பழனிநாடார், செயல் அலுவலர் ம.சாமுவேல்துரைராஜ், வி.முருகன், எஸ்.கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

÷திருவிளக்கு பூஜையை மு.முத்துலட்சுமி தொடங்கி வைத்தார். விவேகானந்தா கேந்திரத்தின் திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர் வி.ஜானகி புஷ்பம் திருவிளக்கு பூஜை குறித்து விளக்கமளித்தார்.

÷ஸ்ரீஅழகுபார்வதி அம்மன் திருவிளக்கு பூஜை கமிட்டிச் செயலர் ஏ.ஐயப்பன் வரவேற்றார். பொருளாளர் எஸ்.மனோகர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com