களக்காடு, பிப். 10:÷களக்காடு அருகேயுள்ள பத்மனேரி ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்டோர் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் அண்மையில் இணைந்தனர்.
÷களக்காடு ஊராட்சி ஒன்றியம், பத்மனேரி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் எஸ்.ஏ. நம்பி. இவர் நீண்டகாலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்.
÷ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பட்டு. இவர் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பத்மனேரி ஊராட்சியைச் சேர்ந்த சிலருடன், அதிமுக மாவட்டச் செயலர் முருகையா பாண்டியன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.