பெண் மீது தாக்குதல்: உறவினர் கைது

சுரண்டை, பிப்.10:÷சுரண்டையில் குடும்பத் தகராறில் பெண்ணைத் தாக்கியதாக உறவினரைப் போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். ÷சுரண்டை, ஆலடிபட்டியைச் சேர்ந்தவர் ஆ.முக்கம்மாள் (45). பீடி சுற்றும் தொழிலாளியான இவ
Published on
Updated on
1 min read

சுரண்டை, பிப்.10:÷சுரண்டையில் குடும்பத் தகராறில் பெண்ணைத் தாக்கியதாக உறவினரைப் போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

÷சுரண்டை, ஆலடிபட்டியைச் சேர்ந்தவர் ஆ.முக்கம்மாள் (45). பீடி சுற்றும் தொழிலாளியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது சித்தி புஷ்பத்துக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டதாம்.

÷ இதுகுறித்து புஷ்பம் தனது மகன் முத்துச்சாமியிடம் (35) தெரிவித்தாராம். இதையடுத்து முத்துச்சாமி, மூக்கம்மாளைத் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த மூக்கம்மாள் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

÷இதுகுறித்த புகாரின்பேரில் சுரண்டை போலீசார் முத்துச்சாமியை கைது செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com