விபத்தில் பூ வியாபாரி சாவு

சங்கரன்கோவில், பிப். 10:÷சங்கரன்கோவில் அருகே பைக் மீது லாரி மோதியதில் பூ வியாபாரி இறந்தார். ÷சங்கரன்கோவில் அருகேயுள்ள அழகாபுரியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வேலுச்சாமி (27). பூ வியாபாரி.÷சங்கரன்கோவில் ச
Published on
Updated on
1 min read

சங்கரன்கோவில், பிப். 10:÷சங்கரன்கோவில் அருகே பைக் மீது லாரி மோதியதில் பூ வியாபாரி இறந்தார்.

÷சங்கரன்கோவில் அருகேயுள்ள அழகாபுரியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வேலுச்சாமி (27). பூ வியாபாரி.÷சங்கரன்கோவில் சங்குபுரம் பகுதியில் வசித்து வந்தார்.

 இவர், வியாழக்கிழமை இரவு பைக்கில் அழகாபுரியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.÷பெருங்கோட்டூர் அய்யனார் கோயில் அருகே எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியதாம்.÷

 இதில் பலத்த காயம் அடைந்த வேலுச்சாமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து குருவிகுளம் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சங்கரன்கோவிலில் அமைதி திரும்பியது

சங்கரன்கோவில், பிப். 10:÷சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையிஹல் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு அமைதி திரும்பியது.

÷சங்கரன்கோவிலில் பிப்ரவரி 7-ம் தேதி இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.

 பொருள்கள் சேதப்படுத்தப்பட்டன. இச்சம்பவத்தால் பலர் காயம் அடைந்தனர்.÷இதையடுத்து போலீஸôர் கண்ணீர்புகை குண்டு வீசி கலவரத்தை அடக்கினர்.

÷இச்சம்பவம் தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வியாழக்கிழமை மைதீன் என்பவரது கோழிக்கடை தீப்பிடித்து எரிந்ததால் சிறிது பதற்றம் ஏற்பட்டது.÷கழுகுமலை சாலை, காந்திநகர், கக்கன்நகர் பகுதிகளில் ஒரு தரப்பினர் அடைத்திருந்த தங்களது

கடைகளை வெள்ளிக்கிழமையும் திறக்கவில்லை.÷வழக்கம்போல மக்கள் நடமாட்டம் இருந்தது. அதனால் அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது.   ÷இந்நிலையில் ஏடிஜிபி ஜார்ஜ் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.பின்னர் அவர், மாவட்ட ஆட்சியர் செல்வராஜ், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.வரதராஜூ உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.÷இதனிடையே கோட்டாட்சியர் இளங்கோ தலைமையில் இருதரப்பினர் பங்கேற்ற சமாதானக் கூட்டம்  நடைபெற்றது.

 இரவு 8 மணிவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.÷கூட்டத்தில் வட்டாட்சியர் தாமோதரன்,நகராட்சித் தலைவர் முத்துச்செல்வி உள்ளிட்ட பிரமுகர்கள்  பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.