மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

தேசிய அருங்காட்சியக தினம்: மாவட்ட அறிவியல் மையத்தில் போட்டிகள்

  தேசிய அருங்காட்சியக தினத்தையொட்டி திருநெல்வேலியிலுள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வரும் 18-ம் தேதி போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

Updated On :12 மே 2013, 5:51 am IST

  தேசிய அருங்காட்சியக தினத்தையொட்டி திருநெல்வேலியிலுள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வரும் 18-ம் தேதி போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

 இது தொடர்பாக அறிவியல் மைய அதிகாரி டி. சீதாராம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தேசிய அருங்காட்சிய தினத்தையொட்டி வரும் 18-ம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 7 மணிவரை அறிவியல் மையத்தில் போட்டிகள் நடத்தப்படுகிறது. முதல் போட்டியாக வரைபட தாளில் அறிவியல் பொம்மைகள் செய்தல் என்ற போட்டியும், 2-வதாக அறிவியல் ஊக்குவிப்புச் சிந்தனையில் அறிவியல் மையத்தின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க வயது வரம்பு 12 முதல் 17 வரை.  இதில், மாணவர்களும், பொதுமக்களும் பங்கேற்கலாம். போட்டிக்குரிய தகவல்களை அறிவியல் மையத்துக்கு நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம்.

 வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை இதற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக எவ்வித கட்டணமும் (நுழைவுக் கட்டணம் உள்பட) வசூலிக்கப்படமாட்டாது.

 முன்பதிவு செய்தவர்கள் மட்டும் வரும் 18-ம் தேதி காலை 9.30 மணிக்கு அறிவியல் மையத்துக்கு வரவேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். அன்று ஒரு நாள் மட்டும் அறிவியல் மையம் காலை 9.30 மணியிலிருந்து இரவு 7 மணிவரை செயல்படும். அன்று மாலை 6.45 மணியளவில் தொலைநோக்கி மூலம் வானத்தை காணுதல் என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0462-2500256 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.