சுடச்சுட

  

  விஷ்வ இந்து பரிஷத் சார்பில் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிற மதங்களைச் சேர்ந்த 200 பேர் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பினர்.

  திருநெல்வேலி சந்திப்பு சங்கீத சபா அரங்கத்தில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விஷ்வ இந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் பெரி. குழைக்காதர் தலைமை வகித்தார்.

  மாநில இணை அமைப்பாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். சுவாமி ஸ்ரீசுத்தானந்தர் ஆசி வழங்கினார். விஷ்வ இந்து பரிஷத்தின் அகில பாரத இணைச் செயலர்கள் கோபால் ரத்தினம், சத்தியம், மாநில அமைப்புச் செயலர் பி.எம். நாகராஜன், மாநில அமைப்பாளர் பெருமாள், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் பாலாஜி கிருஷ்ணசுவாமி, இந்து வழக்குரைஞர் முன்னணி மாநிலச் செயலர் குற்றாலநாதன், பா.ஜ.க. மாவட்ட அமைப்புச் செயலர் டி.வி. சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  பிற மதங்களைச் சேர்ந்த 200 பேர் சாஸ்திர முறைப்படி மீண்டும் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பினர். இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக விஷ்வ இந்து பரிஷத்தின் மக்கள் தொடர்புச் செயலர் பி.கே. சம்பத்குமார் வரவேற்றார். திருநெல்வேலி மாவட்டச் செயலர் டி. செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai