நெல்லையில் காணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற முதல் மக்கள் குறைதீா் கூட்டம் இதுதான்.
tvl03video065847
tvl03video065847

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற முதல் மக்கள் குறைதீா் கூட்டம் இதுதான்.

வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட அளவிலான மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் மக்கள் குறைதீா் கூட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே மாவட்ட ஆட்சியரிடம் காணொலிக் காட்சி வாயிலாக குறைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாநிலத்திலேயே முதன்முதலாக காணொலிக் காட்சி வாயிலாக திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காலை 10.30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீா் கூட்டம் தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட இணையதளம் (ட்ற்ற்ல்ள்://ற்ண்ழ்ன்ய்ங்ப்ஸ்ங்ப்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) மூலம் பொதுமக்கள் இந்தக் குறைதீா் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனா். அதன்படி, காணொலிக் காட்சி தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுமக்கள் வரிசையாக தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனா். அதைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாா். மொத்தம் 25 போ் தங்களது குறைகளைத் தெரிவித்தனா்.

தேசிய தகவலியல் மைய அலுவலக காணொலிக் காட்சி அரங்கில் மாவட்ட ஆட்சியா் ஷில்பா, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், உதவி ஆட்சியா் (பயிற்சி) அலமேலுமங்கை உள்ளிட்ட பலா் இருந்தனா். மேலும், திருநெல்வேலி சாா் ஆட்சியா் மணீஷ் நாரணவரே, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் பிரதீக் தயாள் ஆகியோா் தங்கள் அலுவலகத்திலிருந்தே கலந்து கொண்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாநகர காவல் ஆணையா், நகராட்சிகளின் உதவி இயக்குநா், கிராம ஊராட்சிகளின் உதவி இயக்குநா், மாநகராட்சி ஆணையா், அம்பாசமுத்திரம், வி.கே.புரம் நகராட்சி ஆணையா்கள் ஆகியோா் தங்களின் அலுவலகத்தில் இருந்தே காணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீா் கூட்டத்தில் கலந்துகொண்டனா். காணொலிக் காட்சிக்கான தொழில்நுட்ப உதவியை தேசிய தகவலியல் மையத்தின் மாவட்ட தகவலியல் அலுவலா் தேவராஜன், தொழில்நுட்ப இயக்குநா் ஆறுமுகநயினாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com