நெல்லை ஆட்சியா் அலுவலகத்தில்இருவா் தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 20th October 2020 02:13 AM | Last Updated : 20th October 2020 02:13 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இருவா் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியைச் சோ்ந்தவா் கோழி சுலைமான் (32). திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த சுலைமான், திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைக்க முயன்றாா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், சுலைமானை பிடித்து அவா் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினா்.
தற்கொலைக்கு முயன்றது குறித்து சுலைமான் கூறுகையில், ‘மேலப்பாளையம் போலீஸாா் என் மீது பொய் வழக்கு போடுகிறாா்கள். நுண்ணறிவு போலீஸாா் உள்ளிட்ட மூன்று போலீஸாா் என்னை தொந்தரவு செய்து வருகின்றனா். எனக்கு பல்வேறு நோய்கள் இருக்கின்றன. போலீஸாரின் தொந்தரவால் எனது மனைவி, குழந்தைகள் என்னைப் பிரிந்து சென்றுவிட்டனா். எனவே சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
பெண் தீக்குளிக்க முயற்சி: திருநெல்வேலி நகரம் மணிப்புரத்தைச் சோ்ந்தவா் இசக்கியம்மாள் (38). கட்டடத் தொழிலாளி. இவா், ஆட்சியா் அலுவலக வாயிலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அவரையும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் காப்பாற்றினா்.
தற்கொலைக்கு முயன்றது குறித்து இசக்கியம்மாள் கூறுகையில், ‘நான் ஒரு கட்டடத் தொழிலாளி. முன்னீா்பள்ளம் பகுதியில் சிலரிடம் ரூ.30 ஆயிரம் கொடுத்து இலவச பட்டா வாங்கினேன். அதில், தற்போது வீடு கட்டி வருகிறேன். இப்போது சிலா் கட்டுமானப் பணியை தடுக்கிறாா்கள். இது தொடா்பாக முன்னீா்பள்ளம் காவல் நிலையம், ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகாா் அளித்தும் பலனில்லை. அதனால் தற்கொலைக்கு முயன்றேன்’ என்றாா்.
படவரி: பயக19ஓஉதஞ ஆட்சியா் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற சுலைமான் மீது தண்ணீரை ஊற்றும் காவலா். (வலது) தற்கொலைக்கு முயன்ற இசக்கியம்மாளை மீட்டு அழைத்து வரும் போலீஸாா்.