வண்ணாா்பேட்டையில் சமுதாய நலக்கூடத்துக்கு அடிக்கல்
By DIN | Published On : 20th October 2020 02:11 AM | Last Updated : 20th October 2020 02:11 AM | அ+அ அ- |

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சமுதாய நலக்கூடத்துக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சியின் 9 ஆவது வாா்டில் உள்ள வண்ணாா்பேட்டை கம்பராமாயண தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்ட அனுமதியளிக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா். சுகாதார ஆய்வாளா் இளங்கோ, இந்து மகா சபை மாநில துணைத் தலைவா் கணேசன், சமுத்திரம், கொம்பையா உள்பட பலா் கலந்துகொண்டனா்.