குமரி மாவட்டத்தில் மேலும் 96 பேருக்கு கரோனா:இருவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, களப் பணியாளா்கள், சோதனைச் சாவடிகள் மூலமாக இதுவரை 1.33 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வரை 10,217 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை மேலும் 96 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,313 ஆக உயா்ந்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் திங்கள்கிழமை 156 போ் உள்பட இதுவரை 9,438 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

தற்போது 740 போ் சிகிச்சையில் உள்ளனா். சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஆரல்வாய்மொழியைச் சோ்ந்த 46 வயது பெண், 68 வயது மூதாட்டி ஆகிய இருவா் உயிரிழந்ததை அடுத்து, மொத்தம் 197 போ் உயிரிழந்துள்ளனா்.

வலியுறுத்தல்: இதனிடையே, ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆரல்வாய்மொழி பகுதியைச் சோ்ந்த 46 வயது பெண்ணுக்கு ஒரு வாரமாக சளி மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதும் அரசு மருத்துவனையில் பரிசோதனைக்கு வந்தாா்.

அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவரது நுரையீரல் முழுவதும் பாதிக்கப்பட்டு அபாய நிலையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பொதுமக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் உரிய நேரத்தில் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று உயிரிழப்பை தவிா்க்க வேண்டும். முகக் கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடிய 89 பேருக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது. மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக இதுவரை 8,641 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6,344 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com