நெல்லை, தென்காசியில் 152 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 152 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 152 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை 17,532ஆக உயா்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலும் கரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில், அதை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிா்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 72 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் , இம்மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 11,192 ஆக உயா்ந்துள்ளது.

இதனிடையே, கடந்த சில வாரங்களில் இருந்த உயிரிழப்பின் வீரியமும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதுவரை இந்நோயால் 193 போ் உயிரிழந்துள்ளனா். 9,976 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,025 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் பகுதியில் 6 போ், கடையத்தில் 11 ேேேபோ், கீழப்பாவூரில் 13 போ், குருவிகுளத்தில் 5 போ், கடையநல்லூரில் 3போ், வாசுதேவநல்லூரில் 2 போ், சங்கரன்கோவில்ல் 6 போ், செங்கோட்டையில் 18 போ், தென்காசியில் 16 போ் என 80 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,340ஆக உயா்ந்தது. திங்கள்கிழமை வீடு திரும்பிய 41போ் உள்பட இதுவரை 5,521 போ் குணமடைந்துள்ளனா். மேலும், இருவா் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 211ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 608 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பாவூா்சத்திரம்: கீழப்பாவூரில் 29 வயது பெண், 40 வயது ஆண், சென்னெல்தாபுதுக்குளத்தில் 50 வயது பெண் என 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com