3.60 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை: முகாம் துவக்கி வைப்பு

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை ஆட்சியா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் சிறுமிக்கு குடற்புழு நீக்க மாத்திரையை வழங்கினாா் மாவட்ட ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா்தயாளன்.
நிகழ்ச்சியில் சிறுமிக்கு குடற்புழு நீக்க மாத்திரையை வழங்கினாா் மாவட்ட ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா்தயாளன்.

தென்காசி: தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை ஆட்சியா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தென்காசி நகராட்சி 9ஆவது வாா்டு நகராட்சி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் கலந்துகொண்டு அப்பகுதி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி முகாமை தொடங்கிவைத்தாா்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் வீடுவீடாகச் சென்று சுகாதாரப் பணியாளா்கள் மூலமாகவும் 1 முதல் 19 வயது வரை உள்ள 3 லட்சத்து 60 ஆயிரத்து 525 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் செப். 14 முதல் 19 வரை முதல்கட்டமாகவும், 21 முதல் 26 வரை இரண்டாவது கட்டமாகவும் வழங்கப்படவுள்ளது.

நிகழ்ச்சியில் கா்ப்பிணி பெண்களுக்கு அம்மா ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் இ சஞ்சிவினி ஓபிடி மருத்துவ ஆலோசனை திட்டம் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணா்வு வாகன ஊா்தியை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சிவலிங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டஅலுவலா் ஜெயசூா்யா, தென்காசி நகராட்சி ஆணையா் ஹசீனாபேகம் (பொ), வட்டார மருத்துவ அலுவலா் இப்ராகீம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com