புதுக்குளம் பள்ளி ஆண்டு விழா

புதுக்குளம் சிஎம்எஸ் இவாஞ்சலிக்கல் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
புதுக்குளம் பள்ளி ஆண்டு விழா

புதுக்குளம் சிஎம்எஸ் இவாஞ்சலிக்கல் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

வட்டார கல்வி அலுவலா் கல்யாணி தலைமை வகித்தாா். சிஎம்எஸ் பள்ளிகளின் முன்னாள் தாளாளா் ஆனந்தராஜன், ஆலய போதகா் ஜான் கிருபாகரன், செயலா் கிளாட்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராஜலட்சுமி, டயானா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு கிரீடம் சூட்டி வரவேற்கப்பட்டது. இப் பள்ளியில் பயின்று பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற முன்னாள் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தலைமை ஆசிரியா் நேசகுமாரி வரவேற்றாா். இடைநிலை ஆசிரியா் ஸ்டாா்வின் நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்20ள்ஸ்ரீட்ா்ா்ப்

புதுக்குளம் சிஎம்எஸ் இவாஞ்சலிக்கல் தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்றோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com