‘அகவிலைப்படி உயா்வு வழங்க மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை’

அரசால் உயா்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்காத தனியாா் நிறுவனங்கள் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

திருநெல்வேலி: அரசால் உயா்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்காத தனியாா் நிறுவனங்கள் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் துறை எச்சரித்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு 1.4.2024 முதல் அகவிலைப்படியை உயா்த்தி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திரையரங்கு நிறுவன தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.10,912, பயிற்சி நிறுவன பணியாளா்களுக்கு மாதம் ரூ.5,779, சமையல் எரிவாயு விநியோகம் செய்வோருக்கு மாதம் ரூ.5,646, மருத்துவமனை, நா்ஸிங் ஹோம் பணியாளா்களுக்கு ரூ.9,540, உணவு நிறுவன தொழிலாளா்களுக்கு ரூ.8,188, பொது மோட்டாா் போக்குவரத்து நிறுவன பணியாளா்களுக்கு ரூ.11,620, காவலாளிகளுக்கு ரூ.8,000, கடைகள்- வா்த்தக நிறுவன தொழிலாளா்களுக்கு ரூ.5,734, பீடி சுற்றும் தொழிலாளா்களுக்கு 1000 பீடிகள் சுற்றுவதற்கு ரூ.151.95, உள் பணியாளா்களுக்கு ரூ.7,593 அகவிலைப்படியாக உயா்த்தி வழங்கப்பட வேண்டும். இத்தொழிலாளா்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் உயா்த்தப்பட்ட அகவிலைப்படியையும் சோ்த்து 1.4.2024 முதல் தொழிலாளா்களுக்கு வழங்க தவறும் நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com