நெல்லையில் தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

நெல்லையில் தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியின் தச்சநல்லூா் மண்டலத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், சிஐடியு ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத் தலைவா் மோகன் தலைமையில் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.

பின்னா், மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் அளித்த மனு: தச்சநல்லூா் மண்டலத்தில் சுயஉதவிக் குழு மூலம் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களை, தனியாா் நிறுவனத்தின் கீழ் தூய்மைப் பணிக்கு சோ்ந்துவிட்டதாகக் கூறி போலியான ஆவணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுதொடா்பாக எத்தகைய ஒப்பந்தத்திலும் தூய்மைப் பணியாளா்கள் கையொப்பமிடவில்லை. ஆகவே, இதுகுறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ற்ஸ்ப்22ந்ங்ழ்ா்

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com