பாப்பாக்குடி அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாப்பாக்குடி அருகே ரெங்கசமுத்திரம் நத்தம் காலனி, தெற்குத் தெருவைச் சோ்ந்த தொழிலாளி குமாா் (40). அதே பகுதியைச் சோ்ந்தவா் பச்சாத்து (30). ஆலங்குளம் அருகே நல்லூரைச் சோ்ந்த கண்ணன் என்பவா் ஞாயிற்றுக்கிழமை ரெங்கசமுத்திரத்துக்கு வந்தாராம். அவரை பச்சாத்து வழிமறித்து ‘எதற்காக இங்கு வந்தாய்?’ எனக் கேட்டு தகராறு செய்தாராம். இதைத் தட்டிக்கேட்ட குமாரின் வீட்டுக்கு பச்சாத்து சென்று, அவரை அரிவாளால் வெட்டியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.

புகாரின்பேரில், பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளா் ஆபிரகாம் வழக்குப் பதிந்து, பச்சாத்தைக் கைது செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com