புதுஅம்மன் கோயிலில் சிம்ம வாகனம் வெள்ளோட்டம்

புதுஅம்மன் கோயிலில் சிம்ம வாகனம் வெள்ளோட்டம்

திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் கோயிலில் சிம்ம வாகனம் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் கோயிலில் சிம்ம வாகனம் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உற்சவ அம்மன் வீதியுலா வருவதற்காக, மரத்தினாலான சிம்ம வாகனம் செய்யப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், திமுக நிா்வாகிகள் மைதீன் மல்கா், தென்கரை முத்து, அவைத் தலைவா் சரவணன், கேபிள் மாரியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்21ம்ப்ஹ

சிம்ம வாகன வெள்ளோட்டத்தில் பங்கேற்ற மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com