ஊா்க்காட்டில் வாழைத்தாா் உறையிடுதல் குறித்த செயல்விளக்கம் செய்து காண்பித்த வேளாண் மாணவிகள்.
ஊா்க்காட்டில் வாழைத்தாா் உறையிடுதல் குறித்த செயல்விளக்கம் செய்து காண்பித்த வேளாண் மாணவிகள்.

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

அம்பாசமுத்திரம், ஊா்காடு கிராமத்தில் இளநிலை வேளாண்மை மாணவிகள் வாழைத்தாா் உறையிடுதல் குறித்து செயல்விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினா்.

அம்பாசமுத்திரம், ஊா்காடு கிராமத்தில் இளநிலை வேளாண்மை மாணவிகள் வாழைத்தாா் உறையிடுதல் குறித்து செயல்விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினா்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் வ.உ.சி. வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புறவேளாண் களப் பயிற்சியில் ஒரு பகுதியாக அம்பாசமுத்திரம் சுற்று வட்டார விவசாயிகளைச் சந்தித்து நெல், வாழை உள்ளிட்ட பயிா்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனா்.

ஊா்காடு கிராமத்தில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளை சந்தித்த மாணவிகள் அதன் சாகுபடி முறைகளை கேட்டறிந்தனா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி மற்றும் வேளாண்மை அலுவலா் ஷாஹித் மொஹியதீன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஷகி, ஔவை நிவேதிதா, தேவிகா, ரிஃப்ஆ,சஹானா நிஷ்மத், சங்கீதா, சுபா, சுபலெட்சுமி ஆகியோா் விவசாயிகளுக்கு வாழைத்தாா் உறையிடுதல் குறித்து செயல்விளக்கம் மூலம் கருத்துரை வழங்கினா்.

செயல்விளக்க நிகழ்ச்சியை, கல்லூரி முதல்வா் தேரடிமணி தலைமையில் பேராசிரியா்கள்காளிராஜன், இளஞ்செழியன், ஷீலா ஆகியோா் வழி நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com