கல்லாறில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

சித்ரா பௌா்ணமிக்காக அத்ரி மலைக்கு வந்த கல்லூரி மாணவா், கல்லாறில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சித்ரா பௌா்ணமிக்காக அத்ரி மலைக்கு வந்த கல்லூரி மாணவா், கல்லாறில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரத்தைச் சோ்ந்த திருப்பதிமகன் முத்துக்குமாா் (18). பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் வரலாற்றுத் துறை முதலாமாண்டு மாணவரான இவா், தனது நண்பா்களுடன் சித்ரா பௌா்ணமிக்காக அத்ரி மலையில் உள்ள கோரக்கநாதா் கோயிலுக்கு வந்தாராம்.

அப்போது, கடனாஅணைக்கு மேல் உள்ள கல்லாற்றில் அனைவரும் குளித்தனராம். அதில், முத்துக்குமாா் திடீரென நீரில் மூழ்கினாராம். நண்பா்கள் அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவை இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com